Header Ads

தொழுகைக்கு பின் ஓதும் துஆக்கள்

  ஏக இறைவனின் திருப்பெயரால்,

 ஒரு முஸ்லீமின் வாழ்நாளில் தொழுகை என்பது மிகவும் இன்றியமையாதது. அந்தத் தொழுகைக்கு பின் ஓத வேண்டிய துஆக்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கற்றுத் தந்துள்ளார்கள்.

  எனவே, அத்தகைய துஆக்களை செயலி வடிவில் உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகும் இந்த துஆக்களை ஓதி தாங்களும் பயன் பெறுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள். இந்த வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.


அல்லாஹு அக்பர் 

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன்

நூல் : புஹாரி -842


அஸ்தஃபிருல்லாஹ்(மூன்று தடவை)

பொருள்: அல்லாஹ்விடம்  மன்னிப்பு கேட்கிறேன்

நூல் : முஸ்லிம் -931


அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் , வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த யாதல் ஜலாலில் வல்இக்ராம்

பொருள்:  இறைவா! நீ சாந்தி அளிப்பவன், உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. மகத்துவமும் கண்ணியமும் உடையவனே!. நீ பாக்கியமிக்கவன்!

நூல் : முஸ்லிம் -931


லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லகு லகுல் முல்கு வலஹுல் ஹம்து வகுவ அலா குல்லி ஷையின் கதிர். அல்லாஹும்ம லமானிஅ லிமா அ ஃதய்த வலா முஃதிய லிமா மனாஃத வலா யன்ஃபவு தல் ஜத்தி மின் கல் ஜத்து.

பொருள்:  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்  தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லா பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது, நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்த செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம்  பயன் அளிக்காது.

நூல் : முஸ்லிம் -931


லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லகு லகுல் முல்கு வலஹுல் ஹம்து வகுவ அலா குல்லி ஷையின் கதிர், லா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹ்,லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅபுது  இலா இய்யாஹு லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபழலு  வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லா இலாஹ இல்லல்லாஹு முஃலிஸீன லஹுத்தீன வலவ்கறிகல் காஃபிரூன்.

பொருள்:  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்  தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லா பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். நல்லவற்றை செய்வதற்கோ தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹுவின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்  தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்  தவிர எவருமில்லை. நிராகரிப்பவர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியது.

நூல் : முஸ்லிம் -935


அல்லாஹும்ம அயீன்னீ  அலா திக்ரி(க்)க வ ஷுக்ரி(க்)க வ ஹுஸ்னி இபாததி(க்)க

பொருள்:  இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!

நூல் : அபூ தாவூத் -1301


அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வஅஊது பிக்க மினல் ஜூப்னி,  வஅஊது பிக்க மின் அன் உரத்த இலா அர்தலில் உமுரி ,வஅஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, மின் அதாபில் கபூர்.

பொருள்:  இறைவா! நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புக்  கோருகிறேன். உன்னிடம் நான் கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.நாங்கள் தள்ளாத வயதிற்கு தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக்  கோருகிறேன்.இம்மையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக்  கோருகிறேன்.

நூல் : புஹாரி -6390


ரப்பி கினீ  அதாப(க்)க யவ்ம தப் அ ஸு இபாத(க்)க

பொருள்:  என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!

நூல் : முஸ்லிம் -1290


அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யும். லா தஃகுதுஹு ஸினத்துன் வலா நவ்முன், லஹுமா பி(f)ஸ்ஸமாவா(த்)தி வமா பி(f)ல் அர்ளி மன் தல்லதீ யஷ்ப(f)வு இந்தஹு இல்லா பி(b) இத்னிஹி, யஃலமு மா பை(b)ன ஐதீஹிம், வமா ஃ கல்ப(f)ஹும் வலாயுஹீத்தூன பி(b)ஷயின் மின் இல்மிஹி இல்லா பி(b)மா ஷாஅ, வஸிய குர்ஸியுஹுஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்(f)ளுஹுமா வஹுவல் அளிய்யுல்  அளீம்.

பொருள்:  அல்லாஹுவைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன், அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும் பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (கடமையான தொழுகைக்குப் பிறகு ஓதினால் அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது.)

நூல் : சுனனுள் குப்ரா, பாகம் : 6 , பக்கம் : 30


சுபஹானல்லாஹ் (33 தடவை) 

பொருள்:  அல்லாஹ்வே நீ  தூயவன். 


 அல்ஹம்துலில்லாஹ் (33 தடவை) 

 பொருள்:  எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!. 

  

 அல்லாஹு அக்பர் (33 தடவை) 

 பொருள்:  அல்லாஹ் மிகப் பெரியவன். 

 நூறாவது தடவையாக கீழ்கண்ட வாசகத்தைக் கூற வேண்டும். 

 

 லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லகு லகுல் முல்கு வலஹுல் ஹம்து வகுவ அலா குல்லி ஷையின் கதிர். 

 பொருள்:  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்  தவிர எவருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு நிகர் எவருமில்லை, ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லா பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். 

 நூல் : முஸ்லிம் -1048

1 comment:

  1. எப்படி நாங்கள் இதை பிறின்ட் எடுப்பது எழுத்துக்கள் செலக் பன்ன முடியல்ல

    ReplyDelete

Powered by Blogger.