Header Ads

தமிழ் கலிமாக்கள் முஸ்லிம்


கலிமாக்கள் 
மொத்தம் ஐந்து


1. முதலாம் கலிமா தய்யிப்

அரபியில் :-

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّه

அரபு தமிழில் :-

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்.

பொருள் :-

வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்".


2. இரண்டாம் கலிமா ஷஹாதத்

அரபியில் :-

اَشْهَدُ اَنْ لَّآ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَہٗ لَاشَرِيْكَ لَہٗ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُولُہٗ

அரபு தமிழில் :-

அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.

பொருள் :-

நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவனுடைய அடியாரும் இன்னும் அவனுடைய திருத்தூதருமாக இருக்கிறார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்".


3. மூன்றாம் கலிமா தம்ஜீத்

அரபியில் :-

سُبْحَان اللهِ وَالْحَمْدُلِلّهِ وَلا إِلهَ إِلّااللّهُ وَاللّهُ أكْبَرُ وَلا حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللّهِ الْعَلِيِّ الْعَظِيْم

அரபு தமிழில் :-

ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹில் அலிய்யில் அலீம்.

பொருள் :-

அல்லாஹு தஆலா மிகப் பரிசுத்தமானவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன். (பாவங்களை விட்டுத்) திரும்புதலும், இன்னும் (நன்மைகள் செய்யச்) சக்தியும் அல்லாஹு தஆலாவின் உதவியைக் கொண்டே தவிர இல்லை".


4. நான்காம் கலிமா தவ்ஹீத்

அரபியில் :-

لَآ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْىٖ وَ يُمِيْتُ بِيَدِهِ الْخَيْرُؕ وَهُوَ عَلٰى كُلِّ شیْ ٍٔ قَدِیْر

அரபு தமிழில் ;-

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பிய திஹில் கைரு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.

பொருள் :-

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை. ஆட்சியெல்லாம் அவனுக்கே, புகழனைத்தும் அவனுக்கே, அவனே (எல்லாப் பொருட்களுக்கும்) உயிர் கொடுக்கிறவன்; அவனே (எல்லாப் பொருட்களையும்) மரணிக்கச் செய்கிறவன், நன்மையெல்லாம் அவன் கைவசமே இருக்கின்றன. அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உடையவன்".


5. ஐந்தாம் கலிமா ரத்துல் குப்ர்

அரபியில் :-

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنْ اَنْ اُشْرِكَ بِكَ شَيْئًا وَاَنَا اَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ عَنْ كُلِّ دِيْنٍ سِوٰي دِيْنِ الْإِسْلَامِ وَاَسْلَمْتُ وَ ا ٰمَنْتُ وَاَقُوْلُ لَا اِلهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ الله

அரபு தமிழில் :-

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அன் உஷ்ரிக பிக ஷைஅன்(வ்) வஅன அஃலமு வஅஸ்தஃபிருக லிமாலா அஃலமு இன்னக அன்த அல்லாமுல் குயூப் துப்து அன்ஹு வதபர்ரஃது அன் குல்லி தீனின் ஸிவாதீனில் இஸ்லாம் வ அஸ்லம்து வ ஆமன்து வ அகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி.

பொருள் :-

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் அறிந்தவனாயிருக்கும் நிலையில் உனக்கு எப்பொருளையும் இணை வைப்பதை விட்டும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன். நான் அறியாமல் செய்த பாவங்களுக்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவன். நான் (பாவங்களான) அதனை விட்டும் தவ்பாச் செய்து மீண்டேன். இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர மற்றெல்லா மார்க்கங்களை விட்டும் நான் நீங்கி விட்டேன். அல்லாஹ்வுக்கு நான் வழிபட்டு விட்டேன். நான் ஈமான் கொண்டேன். லாஇலாஹ இல்லலல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று நான் கூறுகிறேன்".


4 comments:

  1. MASHA ALLAH ❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. ஸல்லல்லாஹூ அலாமுஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவ வல்லம்
    அஸ்ஸலாமு அலைக்க யாரசூலில்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்

      Delete
    2. ஸல்லல்லஹூ அலைஹிவ ஸல்லம்

      Delete

Powered by Blogger.