எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H24) முஸ்தலிஃபா செல்லுதல்

முஸ்தலிஃபா செல்லுதல்


அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும், மஃரிப் வரை தங்கி விட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல், முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிஃபாவுக்குச் சென்றதும் மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி விட்டு, சுப்ஹ் தொழுகை தொழ வேண்டும்.


”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும், இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்”


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


நூல்: முஸ்லிம் 2137


இந்த ஹதீஸில் நபியவர்கள் வித்ர் தொழுவதை பற்றி குறிப்பிட வில்லை. எனவே, தொழக்கூாது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அது பற்றி தடை இல்லாத வரை, அதிகம் வலியுறுத்தப்பட்ட வித்ர் மற்றும் பஜ்ருடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகளை தொழுவதை தவறு என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவற்றையும், நாமாக விரும்பித் தொழும் நஃபில் தொழுகைகளையும் தொழலாம். தடையில்லை.


No comments

Powered by Blogger.