H19) மீண்டும் இஹ்ராம் கட்டுதல்
ஹஜ்ஜுக்கான இஹ்ராம் கட்டுதல்
உம்ரா முன்னரே முடிந்து விட்டது. இப்போது நீங்கள் ஹஜ் செய்யப் போகிறீர்கள். எனவே, ஹஜ்ஜுக்கான நிய்யத்தை, இப்போது வாயால் கூற வேண்டும். அதாவது,
"லப்பைக்க ஹஜ்ஜன்" (ஹஜ்ஜை நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும்.
3087 - حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ يَحْيَى بْنِ أَبِى إِسْحَاقَ وَعَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ وَحُمَيْدٍ أَنَّهُمْ سَمِعُوا أَنَسًا - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَهَلَّ بِهِمَا جَمِيعًا « لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا »
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.”
அறி: அனஸ்(ரலி)
நூல்: முஸ்லிம் 2194, 2195
இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
No comments