எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

உளு செய்யும் முறை

🔘 உளு செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு, பிஸ்மில்லாஹ் என கூறவேண்டும்.


🔘 இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.


🔘 மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும். 
மூக்கையும் மூன்று முறை சுத்தம் செய்யவேண்டும்.


🔘 முகத்தை மூன்று முறை கழுவவேண்டும். அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நீளத்தால் நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் நாடி வரையும் கழுவவேண்டும்.


🔘 இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். 
முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.


🔘 தலையை ஒரு தடவை தண்ணீரால் தடவவேண்டும். இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். 


🔘 பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்.


🔘 இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.

🔘 பிறகு அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ் என்று கூறவேண்டும்.

{இதனுடன் உளு நிறைவுற்றது}


No comments

Powered by Blogger.