எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

வெங்காய கொஸ்த்து

 

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 3

பெரிய தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - 4 அல்லது 5

புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 6 ஸ்பூன்

உப்பு - அரை ஸ்பூன்


செய்முறை:

🔘 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

🔘 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

🔘 லேசாக வதங்கியவுடன் புளிக்கரைசலை ஊற்றி மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.

🔘 இது தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு ஒரு நல்ல சைட்- டிஷ்.


குறிப்புகள்

No comments

Powered by Blogger.