அரேபியன் முர்தபா
தேவையான பொருட்கள்:
மாவு தயாரிக்க:
மைதா - 2 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு சிட்டிகை
தண்ணீர் - பிசைய
ஃபில்லிங் செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மட்டன் கைமா - 50 கிராம்
முட்டை - 3
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
🔘 மைதாவில் வெண்ணெயை உருக்கி ஊற்றி, பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
🔘 ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, இஞ்சி பூண்டு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
🔘 பின் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் தனித்தனியே சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, கைமா கலவையில் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
🔘 முட்டையை உடைத்து ஊற்றி கலக்கி வைக்கவும்.
🔘 மாவை உருண்டை போட்டு சமதளத்தில் வைத்து வளர்த்து, நடுவில் ஃபில்லிங் வைக்கவும்.
🔘 இருபுறமும் படத்தில் உள்ளது போல் மடிக்கவும்.
🔘 மடித்த முர்தபாவில் இருபுறமும் முட்டை தடவி, ஒரு தவாவில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுடவும்.
🔘 அரேபியன் முர்தபா ரெடி.
குறிப்புகள்
1. முர்தபாவிற்கு ஃபில்லிங் இறால், சிக்கன், உருளைக்கிழங்கிலும்
செய்யலாம்.
No comments