பொரித்த சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
ஓமம் (oregano) - சிறிது (விரும்பினால்)
கார்ன் ஃபிளார் - 2 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
🔘 எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு, தயிர், வினிகர், உப்பு போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.
🔘 பின்னர் அதில் தந்தூரி மசாலா பவுடர், மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
🔘 அதனுடன் கார்ன் ஃபிளார் மற்றும் முட்டை சேர்க்கவும்.
🔘 எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
🔘 கடைசியாக ஆரிகானோ சேர்க்கவும்.
🔘 மிதமான தீயில் பொரித்து பொரித்து எடுக்கவும்.
🔘 சுவையான பொரித்த தந்தூரி சிக்கன் தயார்.
குறிப்புகள்
சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பிரியாணியுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் மற்றும் சினேக்ஸ் ஆகவும் சாப்பிட்டோம் நல்ல சுவையாக இருக்கும்...
No comments