முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 5 கப்
சுண்டைக்காய் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
🔘 கீரையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுண்டைக்காயைப் பாதியாக நறுக்கி வைக்கவும்.
🔘 வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
🔘 பிறகு கீரையைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
🔘 சுவையான முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் தயார்.
குறிப்புகள்
வயிற்று புண் ஆற கொழுப்பை கரைக்க இந்த முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் ஒன்றே போதும்
No comments