எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

Quran dua

குர்ஆன் துஆக்கள் 

மொத்த துஆக்கள் 45

1. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவோம்.

(அல் அஃராஃப் 7:23)


2. என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காதபடி என்னைப் பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்.

(ஹூது 11:47)


3. என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பு வழங்கு!

(நூஹ் 71:28)


4. எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த அமல்களை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீ (எங்களுடைய இந்தப் பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய். எங்களை நீ மன்னித்துவிடு! நிச்சயமாக நீ மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்

(அல்பகறா 2:127,128)


5. என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கி வை. எங்கள் இறைவனே! மேலும் என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்!

(இப்ராஹீம் 14:40)


6. எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பு அளித்திடு!

(இப்ராஹீம் 14:41)


7. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தைத் தா! மேலும் நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வை! பிற்காலத்தில் தோன்றுவோருக்கிடையில் எனக்கு நற்பெயரையும் சிறப்பையும் தா! இன்பச் சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வை! (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!

(அஷ்ஷுஅறா 26:83-87)


8. என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கு!

(அஸ்ஸாஃப்ஃபாத் 37:100)


9. எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன் பக்கமே நாங்கள் திரும்பிவிட்டோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கின்றது.

(அல்மும்தஹினா 60:4)


10. எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னித்திடு! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்

(அல்மும்தஹினா 60:5)


11. என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள்புரி! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க் கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடு!

(அன்னம்லு 27:19)


12. என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கு நல்ல சந்ததியை அளித்திடு! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவியேற்பவனாக இருக்கின்றாய்!

(ஆலு இம்ரான் 3:38)


13. என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசுதாரர்களில் மிக்க மேலானவன்.

(அல்அன்பியா 21:89)


14. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு எவரும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். (என்னை மன்னித்து அருள்புரி!)

(அல்அன்பியா 21:87)


15. என் இறைவனே.. என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு! (நான் செய்ய வேண்டிய) காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை! என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு! என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள்.

(தாஹா 20:25-28)


16. என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ எனக்கு மன்னிப்பு வழங்கு!

(அல்கஸஸ் 28:16)


17. எங்கள் இறைவனே! நீ இறக்கியதை நாங்கள் நம்புகின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்!

(ஆலு இம்ரான் 3:53)


18. எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே! எங்கள் இறைவனே! நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களைப் பாதுகாத்துக் கொள்!

(யூனுஸ் 10:85,86)


19. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை எங்களுக்கு நீ மன்னித்துவிடு! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறிய (குற்றத்)தையும் மன்னித்துவிடு! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வை! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றி பெற நீ எங்களுக்கு உதவிசெய்!

(ஆலு இம்ரான் 3:147)


20. எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளித்திடு! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கிடு!

(அல்கஹ்ஃப் 18:10)


21. என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மேன்மேலும் அதிகப்படுத்து!

(தாஹா 20:114)


22. என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். மேலும், என் இறைவனே! ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன்.

(அல்முஃமினூன் 23:97,98)


23. என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துவிடு! (எனக்கு) கிருபை செய்! கிருபை செய்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.

(அல்முஃமினூன் 23:118)


24. எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் வேதனையைவிட்டு எங்களை நீ பாதுகாத்துக்கொள்!

(அல்பகறா 2:201)


25. எங்கள் இறைவனே! (உன் வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கட்டுப்பட்டோம். நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் (நாங்கள்) சேரவேண்டியதிருக்கின்றது

(அல்பகறா 2:285)


26. எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையைச் சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!) எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழித்துவிடு! எங்களை மன்னித்திடு! எங்கள் மீது கருணை புரிந்திடு! நீதான் எங்கள் இறைவன்! ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிந்திடு!

(அல்பகறா 2:286)


27. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதிலிருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளித்திடு! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!

(ஆலு இம்ரான் 3:8)


28. எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையை விட்டு எங்களை நீ காப்பாற்று! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை. எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்துவிடு! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடு! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்! எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தா! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல.

(ஆலு இம்ரான் 3:191-194)


29. எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொண்டோம். நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! எங்கள் மீது அருள் புரி! அருள்புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்.

(அல்முஃமினூன் 23:109)


30. எங்கள் இறைவனே! நரகத்தின் வேதனையை எங்களை விட்டு தடுத்துக் கொள்! ஏனென்றால், நிச்சயமாக அதன் வேதனை நிலையான துன்பமாகும். சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும்.

(அல்ஃபுர்கான் 25:65,66)


31. எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகள் மூலமாகவும், எங்கள் பிள்ளைகள் மூலமாகவும் எங்களுக்கு கண் குளிர்ச்சியைத் தா! மேலு‌ம் இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை ஆக்கு!

(அல்ஃபுர்கான் 25:74)


32. என் இறைவனே! நீ என் மீதும் என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்து வதற்கும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்வதற்கும் நீ என்னைச் சீர்ப்படுத்து! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தைச் சீர்திருத்தி வை. நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்பி விட்டேன். (உனக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில் நானும் ஒருவன்

(அல்அஹ்காஃப் 46:15)


33. எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்!நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை வைத்துவிடாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும் இரக்கமுடையவனுமாக இருக்கின்றாய்!

(அல்ஹஷ்ர் 59:10)


34. எங்கள் இறைவனே! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கி வை! எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! நிச்சயமாக நீ அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்

(அத்தஹ்ரீம் 66:8)


35. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, நீ எங்களுக்கு எங்களுடைய பாவங்களை மன்னித்துவிடு! (நரக) நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்று

(ஆலு இம்ரான் 3:16)


36. எங்கள் இறைவனே!நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.ஆகவே"சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்!

(அல்மாயிதா 5:83)


37. என் இறைவா..இந்த ஊரை பாதுகாப்புடையதாக ஆக்கி வை!சிலைகளை வணங்குவதைவிட்டு என்னையும் என் சந்ததிகளையும் தூரமாக்கி வை!

(இப்ராஹீம் 14:35)


38. என் இறைவனே!நீ எனக்குத் தரும் எந்த நன்மையாயினும் சரி,நிச்சயமாக நான் அதற்கு மிகத் தேவையுள்ளவனாகவே இருக்கிறேன்.

(அல்கஸஸ் 28:24)


39. என் இறைவனே!விஷமம் செய்யும் மக்களுக்கு எதிராக எனக்கு உதவி செய்!

(அல் அன்கபூத் 29:30)


40. எங்கள் இறைவனே!அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்து விடாதே!

(அல் அஃராஃப் 7:47)


41. அல்லாஹ் தான் எனக்குப் போதுமானவன். அவனை தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் அறவே இல்லை; என் காரியங்கள் அனைத்தையும் அவனிடமே நான் ஒப்படைத்து விட்டேன். அவன்தான் மகத்தான (அர்ஷின்) அதிபதி

(அத்தவ்பா 9:129)


42. என் இறைவன் நேரான வழியை எனக்கு அறிவிப்பான்

(அல்கஸஸ் 28:22)


43. என் இறைவனே! அக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னைப் பாதுகாத்துக் கொள்!

(அல்கஸஸ் 28:21)


44. என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துக் கொடு!

(அத்தஹ்ரீம் 66:11)


45. அல்லாஹ்வே! எனக்கு ஹிக்மா-ஞானத்தை வழங்கு. அந்த ஞானம் கொடுக்கப்பட்டவர் பெரும் நன்மையைக் கொடுக்கப்பட்டவராவார்.

(அல்பகரா 2:269)


No comments

Powered by Blogger.