Header Ads

86 - At-Taariq

 86 - ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) (At-Taariq - الطارق)


86:1 - வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக.


86:2 - தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?


86:3 - அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.


86:4 - ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.


86:5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.


86:6 - குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.


86:7 - முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.


86:8 - இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.


86:9 - இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.


86:10 - மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.


86:11 - (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,


86:12 - (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,.


86:13 - நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.


86:14 - அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.


86:15 - நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.


86:16 - நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.


86:17 - எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

 

        Back                    Home                   Next

No comments

Powered by Blogger.