Header Ads

81 - At-Takwir

 81 - ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்) (At-Takwir - التكوير)


81:1 - சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது.


81:2 - நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-


81:3 - மலைகள் பெயர்க்கப்படும் போது-


81:4 - சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-


81:5 - காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-


81:6 - கடல்கள் தீ மூட்டப்படும்போது-


81:7 - உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-


81:8 - உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-


81:9 - "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-


81:10 - பட்டோலைகள் விரிக்கப்படும் போது-


81:11 - வானம் அகற்றப்படும் போது-


81:12 - நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-


81:13 - சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-


81:14 - ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.


81:15 - எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-


81:16 - முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),


81:17 - பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,.


81:18 - மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.


81:19 - நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.


81:20 - (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.


81:21 - (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.


81:22 - மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.


81:23 - அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.


81:24 - மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.


81:25 - அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.


81:26 - எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?


81:27 - இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.


81:28 - உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).


81:29 - ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.


       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.