எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

வெண்டைக்காய் பச்சடி (1)

 

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்  - 10

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

புளி - 1நெல்லிக்காய் அளவு

மல்லி தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்

கரம்மசாலா -  1 ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது -1/2 ஸ்பூன்

தேங்காய் விழுது - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

எண்ணெய் - சிறிது

சீனி - 2ஸ்பூன்


செய்முறை:

🔘 வெண்டைக்காயை கழுவி பின் துடைத்து தலை மற்றும் வால் பகுதியை அரிந்துவிடவும்.

🔘 அரிந்த தலைப்பகுதியிலிருந்து நடுப்பகுதி வரை கீரி விடவும்.

🔘 இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

🔘 புளியை ஊற வைத்து அரைகோப்பை அளவு சாறெடுக்கவும்.

🔘 புளிக் கரைசலில்மல்லி,மஞ்சள்,கரம்மசாலா,இஞ்சி,பூண்டு,தேங்காய்,மிளகாய் தூள் மற்றும் உப்பு அனைத்தையும் போட்டு வைக்கவும்.

🔘 ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,போட்டு வெடித்ததும் கருவேப்பிலை போடவும்.

🔘 அதில் வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

🔘 வதங்கியதும் புளிக் கரைசலை அதில் ஊற்றவும்.

🔘 அதனுள் பொரித்த வெண்டைக்காயை போட்டு மூடி வேக விடவும்.

🔘 கலவை வற்றியதும் இறுதியில் சீனியை போட்டு அடுப்பை சிம்மில்  வைக்கவும்.

🔘 எல்லா மசாலாவும் சேர்ந்து பிரண்டு எண்ணெயை வெளியிடும் போது அடுப்பை அணைக்கவும்.

🔘 இதை பிரியாணி மற்றும் நெய் சாதத்துடன் பறிமாறவும்.


குறிப்புகள்:-

No comments

Powered by Blogger.