Header Ads

104 - Al-Humaza

 104 - ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) (Al-Humaza - الهمزة)


104:1 - குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்,.


104:2 - (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.


104:3 - நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.


104:4 - அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.


104:5 - ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?


104:6 - அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.


104:7 - அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.


104:8 - நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.


104:9 - நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).


        Back                    Home                   Next


No comments

Powered by Blogger.