எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

101 - Al-Qaari'a

 101 - ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச (Al-Qaari'a - القارعة)


101:1 - திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).


101:2 - திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?


101:3 - திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?


101:4 - அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.


101:5 - மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.


101:6 - எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-


101:7 - அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.


101:8 - ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-


101:9 - அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.


101:10 - இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது.?


101:11 - அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.


      Back                    Home                   Next

No comments

Powered by Blogger.